Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரிசோதனையில் சாதனை… ஒரே நாளில் 8.99 லட்சம் மாதிரிகள் பரிசோதனை….!!

இந்தியாவில் நேற்று மட்டும் 8.99 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் தீவிரமாக கொரோனா வைரஸ் பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ச்சியாக முன்னிலையில் இருந்து வருகிறது. குறிப்பாக சென்ற சில வாரங்களாக தினமும் சரசாரி 50,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் 7.31 லட்சம் சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நேற்று புதிய உச்சமாக 8.99 லட்சம் சாம்பிள்கள் செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

நேற்று வரை 3,09,41,264 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும், நேற்று மட்டும் 8,99,864 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும் ஐஎம்சிஆர் தெரிவித்துள்ளது.  பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்தாலும், பாதிப்பு எண்ணிக்கை 8.81 சதவீதம் என்ற அளவில் குறைவாகவே இருக்கிறது. என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. விரைவு சோதனை  கண்காணிப்பு மற்றும் சிகிச்சையை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |