Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

முதல்முறையாக சட்டப்படிப்பு… சாதனை படைத்த தோடர் இளம்பெண்… குவியும் பாராட்டுகள்…!!

சட்டப் படிப்பை வெற்றிகரமாக முடித்து தோடர் இனத்தைச் சேர்ந்த இளம்பெண் சாதனை படைத்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தோடர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த இனத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சட்டப்படிப்பை முடித்து சாதனை படைத்துள்ளார். அங்குள்ள தவிட்டுப் பகுதியில் ஸ்ரீகாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மகள் உள்ளார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை மாவட்டத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து விட்டு, சென்னை பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பயிற்சி பெறுவதற்கு பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் நந்தினி ஊட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் திவ்யாவை நேரில் பார்த்து அவரது சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றுள்ளார். இதுகுறித்து நந்தினி கூறும்போது, அரசு உதவி பெறும் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்ததாகவும், சென்னையில் சட்டப் படிப்பை நிறைவு செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தோடர் இனத்தில் முதல் முறையாக சட்டம் படித்த தான் வழக்கறிஞராக பணிபுரிந்து சமூக மக்களுக்கு சேவை செய்ய காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |