Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“அத கொண்டு வந்துட்டாங்க” விரைவில் பயன்பாட்டுக்கு வரும்…. தெரிவித்த அதிகாரிகள்….!!

வாக்காளர் அட்டைகள் விரைவாக வழங்குவதற்காக அச்சிடும் எந்திரங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டுவரப்படுகிறது.

தமிழகத்தில் 18 வயது நிரம்பியவர்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர். மேலும் புதிய வாக்காளர்கள் ஆன்லைன் மூலமாகவும் அல்லது வாக்காளர் சேர்க்கை முகாம் மூலமாகவும் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கின்றனர். இதன் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெறுகின்றனர். இந்நிலையில் புதிய வாக்காளர் அட்டை புனேவில் இருந்து அச்சிடப்பட்டு கொண்டு வரப்படுவதால் வாக்காளர் அட்டை உரிய நேரத்தில் கிடைப்பதில்லை.

இதனை சரி செய்ய தற்போது அந்தந்த மாவட்டங்களுக்கு  அச்சிடும் எந்திரம் ஆனது கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் திண்டுக்கல்லில் ஆட்சியர் அலுவலகத்திற்கு அச்சிடும் எந்திரம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனையடுத்து  அச்சிடும் எந்திரமானது பயன்பாட்டிற்கு வந்து விரைவில் வாக்களர்களுக்கு அட்டையானது வழக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |