பிரபல நடிகை தேவயானியின் மகள் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது .
தமிழ் திரையுலகில் நடிகை தேவயானி கடந்த 1994-ஆம் ஆண்டு கே.எஸ். அதியமான் இயக்கத்தில் வெளியான ‘தொட்டாசிணுங்கி’ படத்தின் மூலம் அறிமுகமானார் . இந்த படத்தில் கார்த்திக், ரகுவரன், ரேவதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் . இதையடுத்து ஹிந்தி ,மலையாளம் போன்ற பிற மொழித் திரைப்படங்களிலும் நடித்து வந்தார் . கடந்த 1996 இல் அஜித் நடிப்பில் வெளியான ‘காதல் கோட்டை’ படம் தேவயானிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
இதன்பின் கடந்த 2001ஆம் ஆண்டு நடிகை தேவயானி ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் . இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் . தற்போது நடிகை தேவயானி நாக சைத்தன்யா- சாய் பல்லவி நடிக்கும் ‘லவ் ஸ்டோரி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் . இந்நிலையில் விழா ஒன்றில் கலந்து கொண்ட தேவயானியின் குடும்ப புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது . இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அச்சு அசல் தேவயானி போலவே அவரது மகள் இருப்பதாக கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர் .