சென்னையில் அமிலம் வீசி விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளதாக நடிகையின் தாயார் அளித்த புகாரின் பேரில் தந்தை மகனை காவல்துறையினர் கைது செய்தனர்
அரும்பாக்கம் சேர்ந்த சித்ரா என்பவர் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தூரத்து உறவினரான ராஜசேகரனின் மகன் அமுதன் தனது மகன் ஸ்ருதியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமுதனுக்கு ஸ்ருதியை திருமணம் செய்து வைக்கும்படி தந்தையும் மகனும் வற்புறுத்தி வந்ததாகவும் அதற்கு நான் மறுத்ததால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டியதாகவும் சித்ரா புகாரில் கூறியுள்ளார். மேலும் சுருதியை திருமணம் செய்து வைக்கவில்லை எனில் அமிலம் வீசி விடுவதாக இருவரும் மிரட்டி உள்ளதாக அவர் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் தந்தை ராஜசேகரன் மகன் அமுதன் இருவரையும் கைது செய்தனர்.