Categories
உலக செய்திகள்

“பெண் மருத்துவரின் முகத்தில் ஆசிட் வீசிய பெண்!”.. கண்காணிப்பு கேமராவில் தெரிந்த உண்மை.. அதிர்ச்சி சம்பவம்..!!

பிரிட்டனில் பெண் மருத்துவரின் வீட்டின் கதவை தட்டி, ஒரு நபர் ஆசிட் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனில் வசிக்கும் Dr Rym Alaoui என்ற இளம் பெண் மருத்துவர் வீட்டின் கதவை யாரோ தட்டி உள்ளனர். கதவைத் திறந்தவுடன், மருத்துவரின் முகத்தில் ஒரு பெண் ஆசிட் வீசி விட்டு தப்பிச்சென்றார். அவர் அலறியதால் உடனடியாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடி வந்து அவசர சேவையை அழைத்துள்ளார்கள்.

அதன்பின்பு, மருத்துவ உதவி குழுவினர் விரைந்து வந்து அவருக்கு முதலுதவி செய்துள்ளனர்.  அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவர் அனுமதிக்கப்பட்டார். அவரின் வாழ்க்கையே தலைகீழாக மாறும் அளவிற்கு அவரின் முகத்தில் காயம் இருக்கிறது. காவல்துறையினர்,  நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்தனர்.

அப்போது தான் அதிர்ச்சிகரமான உண்மை தெரியவந்தது. முதல் கேமராவில் தெரிந்த பெண்ணின் முகம் கடைசி கேமராவில் ஆணாக மாறியது. அதாவது, ஒரு ஆண் தான், பெண் வேடமிட்டு மருத்துவரின் முகத்தில் ஆசிட் வீசி சென்றுள்ளார் . அந்த நபர் பற்றி விசாரணை நடத்திய போது தான், Dr Rym Alaoui -யிடம் பயிற்சி பெற்ற மருத்துவ மாணவரான Milad Rouf என்ற 25 வயது இளைஞர் என்று தெரியவந்துள்ளது.

எனினும், அந்த நபர் எதற்காக மருத்துவர் மீது ஆசிட் வீசி சென்றார் என்பது தெரியவில்லை. தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவருக்கு வரும் அக்டோபர் மாதத்தில், 7ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.

Categories

Tech |