இளம்பெண் மீது ஆசிட் வீச முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோவிந்தன் நகர் பகுதியில் 25 வயதுடைய இளம் பெண் ஒருவர் நகைக்கடையில் வேலைபார்த்து வருகிறார். கடந்த அக்டோபர் 21 – ஆம் தேதியன்று இளம் பெண் வேலைக்கு செல்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் நேதாஜி ரோடு் நகைக்கடை பஜாரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் இளம்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டிருந்தார்.
அதன் பிறகு அந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து இளம்பெண் மீது வீச முயற்சி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் வாலிபர் கையில் வைத்திருந்த ஆசிட்டை கையை பிடித்து தள்ளிவிட்டார். இதனால் ஆசிட் வாலிபரின் கையில் இருந்து நழுவி கீழே விழுந்துள்ளது. இது குறித்து இளம் பெண் காவல் நிலையத்திற்கு சென்று வாலிபரின் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் வசிக்கும் பிரபு என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.