தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு கொரோனா தடுப்பு பணிகள் குறித்தான உத்தரவுகளை முதல்வர் பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட அளவிலான தடுப்பு பணிகள் குறித்தும், அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை, மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தார்.
அதுமட்டுமல்லாமல் முதல்வர் மாவட்ட ஆட்சியர் சில உத்தரவு பிறப்பித்தார். தமிழகம் முழுவதும் உள்ள முதியோர், இணைநோய் உள்ளோர் மாதிரிகளுக்கு முன்னுரிமை தந்து, கொரோனா சோதனை முடிவுகளை விரைந்து அறிவிக்க ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தீவிர பாதிப்பு அறிகுறி உள்ளவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை இன்னும் தீவிரப்படுத்த வலியுறுத்தி உள்ளார்.