அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவிற்கு நேற்று 282 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று கணக்கெடுப்பின்படி கொரோனா நோய் தொற்றுக்கு புதிதாக 282 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,806 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோய் தொற்றுக்கு தொடர்ந்து 2,320 பேர் சிகிச்சை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை மாவட்டம் முழுவதிலும் கொரோனவிலிருந்து பூரண குணமடைந்து 8,000க்கும் மேற்பட்டோர் வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.