பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமீர்கான். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான லால் சிங் தத்தா திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இதற்கு காரணம் அமீர்கானின் சர்ச்சை பேச்சு தான். அதாவது இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது என்று ஒரு பேட்டியில் கூறினார். இதை காரணம் காட்டி தான் இந்தி ரசிகர்கள் அமீர்கானின் படத்தை புறக்கணித்தனர். இது குறித்து தற்போது பிரபல நடிகை கங்கனா ரணாவாத் பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது, இந்தியாவுக்கு எதிராக பேசியதால்தான் படம் தோல்வி அடைந்தது. அமீர்கான் 2 கோடிக்கு மட்டுமே நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் சம்பளமோ 200 கோடி வாங்குகிறார். படம் ஓடவில்லை என்றால் நடிகர்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் கங்கனா ரணாவத்தின் இந்த பேச்சு பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.