Categories
சினிமா தமிழ் சினிமா

நல்ல படங்களில் நடிக்கனும்…. “டிக் டாக்” புகழ் இலக்கியா ஆசை…!!

“டிக் டாக்” புகழ் இலக்கியா நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

டிக் டாக் மூலம் தனது கவர்ச்சியான நடிப்பால் பலரது கவனத்தை ஈர்த்தவர் இலக்கியா. இவர் தற்போது இயக்குனர் பேரரசு இயக்கத்தில் உருவாகியுள்ள “நீ சுடத்தான் வந்தியா” படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. அப்போது நடிகை இலக்கியா பேசியதாவது, இந்த மேடை எனது கனவு மேடை.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது கனவு. அது இப்போது நிறைவேறி விட்டது. அனைவரும் என்னை ஆதரிக்க வேண்டும்.படத்தில் நடிப்பது எவ்வளவு சிரமம் என்று புரிந்து கொண்டேன். தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மேலும் அனைவரும் இந்த படத்தை ஆதரிக்க வேண்டும்” என்று கூறினார்.

Categories

Tech |