Categories
உலக செய்திகள்

இராணுவ தலைவர்கள் மீது அதிரடி நடவடிக்கை… பிரபல நாடு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

மியான்மர் ராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்கா கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மியான்மர் இராணுவ ஆட்சிக்குழு தலைவர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி ப்ளிகேன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மியான்மரில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஆளும் இராணுவத் தலைவர்கள் குழுவைச் சேர்ந்த விமானப் படைத் தளபதி ஜெனரல் மங் க்யாவ் மற்றும் மோ மைண்ட் டன் ஆகியோர் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அமெரிக்காவில் உள்ள அவர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்படும். வன்முறையை தூண்டி, மக்களுக்கு எதிராக செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்க நாங்கள் ஒருபோதும் தயங்க மாட்டோம். மியான்மர் மக்களுக்கு நாங்கள் அளிக்கும் ஆதரவில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் மியான்மர் ராணுவம் கைப்பற்றி உள்ள அனைத்தையும் விடுவிக்கவேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |