ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 9 பேரை கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக் உத்தரவின் படி அனைத்து பகுதிகளிலும் அந்தந்த காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து சோதனையில் அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து 809 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சாலையில் தேவையின்றி சுற்றிய 89 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 68 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.