நடிகர் நடிகைகளின் சம்பளத்தில் 50 சதவீதம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரைப்பட நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தில் 50 சதவீதம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் காணொளி காட்சி மூலம் நடைபெற்ற தயாரிப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவுஎடுக்கப்பட்டுள்ளது . இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்டோரின் சம்பளத்திலும் 50 சதவீதம் குறைக்க தயாரிப்பாளர்கள் முடிவிடுத்துள்ளனர்.
சம்பளக் குறைப்பு அடுத்த ஓராண்டுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது கொரோனா பாதிப்பு சூழல் சீரான பிறகு பழைய முறையில் சம்பளம் வழங்கப்படும் என்று திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதனால் கோடி கோடியாக சம்பளம் வாங்கிய நடிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.