இறந்த வீட்டில் அழுது கொண்டிருந்த ஒருபெண்ணை மனிதர்களை போலவே குரங்கு ஒன்று அரவணைத்து ஆறுதல் கூறிய நெகிழவைத்தது.
பெங்களூரில், கர்நாடகாவின் நர்குந்த் நகரில், 80 வயது முதியவர் ஒருவர் இறந்து விட்டார். அங்கு பெண்கள் உள்பட பலரும் அழுது கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென்று வந்த ஒரு குரங்கு, அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை மனிதர்களை போலவே அரவணைத்து ஆறுதல் கூறிய அதிசய சம்பவம் நடந்துள்ளது. அப்போது அங்குள்ள அனைவரும் கதறிஅழுகும் பொது அவரது கண்ணீரையும் தனது கையால் துடைத்து அனைவரையும் வியக்க வைத்தது.
இது குறித்து அந்த ஊர் மக்கள் கூறும்போது, இந்த குரங்கு யார் இறந்தாலும் அந்த துக்க வீடுகளுக்கும் சென்று ஆறுதல் கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளது என கூறினர். இதனால் அந்த குரங்கு எங்களில் ஒருவராகவே மாறிவிட்டதாக அந்த ஊர்மக்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர். துக்க வீட்டிற்கு வந்து குரங்கு ஆறுதல் சொல்லும் வீடியோவை பார்த்த பலரும் அதன் மனிதாபிமானத்தை வியந்து பாராட்டி வருகின்றனர்.
https://youtu.be/KsajYYe_gRc