Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இனி யாரும் வர முடியாது…. ஆழமாக தோண்டப்பட்ட குழி… அதிகாரியின் அதிரடி நடவடிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுப்பதற்காக ஆற்றுப்பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆழமாக குழி தோண்டப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கருக்காகுறிச்சி மற்றும் கறம்பக்குடி எல்லைப் பகுதியில் அக்னி ஆற்றுப்பகுதி அமைந்துள்ளது. அந்த ஆற்றில் மணலை அள்ளி செல்ல மணல் கடத்துபவர்கள் ஏதுவாக குவியல் குவியலாக மணலை வைத்துள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் தாசில்தார் விஸ்வநாதன், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த மணலை பொக்லைன் எந்திரம் உதவியுடன் ஆற்றுப்பகுதியில் மணலை நிரப்பியுள்ளனர். இதனையடுத்து மணல் கடத்த லாரிகள் ஆற்றுப்பகுதியில் நுழையாத வகையில் ஆற்றங்கரை ஓரங்களில் பொக்லைன் எந்திர உதவியுடன் ஆழமாக குழி  தோண்டியுள்ளனர். இதனால் மணல் அள்ளுவதற்கு வண்டிகள் ஏதும் ஆற்றினுள் நுழைய முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |