Categories
தேசிய செய்திகள்

பெங்களூர் வன்முறை… உபா சட்டத்தில் நடவடிக்கை… எடியூரப்பா அதிரடி…!!

பெங்களூர் வன்முறையை கருத்தில்கொண்டு அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா உபா சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு வன்முறையால் ஏற்பட்ட சேதங்களை கலவரக்காரர்களிடமே வசூலிக்க அரசு திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காக உயர் நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கடந்த 11ம் தேதி இரவு பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ அகண்ட சீனிவாச மூர்த்தி மற்றும் காவல்நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 1 கோடி ரூபாய்க்கும் மேலான  பொருட்கள் சேதமடைந்து விட்டன. அப்போது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். சுமார் 60 போலீசார் காயமடைந்ததாக காவல்துறை ஆணையர் கமல் பாண்ட் தெரிவித்துள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெங்களூருவில் நடந்த இந்த வன்முறையைக் கண்டிக்கிறேன். யாரும் சட்டத்தைத் தங்களின் கைகளில் எடுத்துக்கொள்ளக் கூடாது. கலவரத்திலும் தீ வைப்பிலும் ஈடுபட்டோர் மீதும் சமூக ஊடகத்தில் அவதூறு பதிவிட்டவர் மீதும் கடுமையான, சரியான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். வன்முறைச் சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இந்த வன்முறை சம்பவங்கள் குறித்து எடியூரப்பா தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள எடியூரப்பா, சேதமடைந்த பொருட்களை மதிப்பீடும் பணி நடைபெற்று வருவதாகவும், கலவரக்காரர்கள் மீது உபா எனப்படும் சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |