லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் செய்த சோதனையில் பல இடங்களில் பணம் சிக்கியது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனராக பணியாற்றுபவர் உமா சங்கர். இவர் தீபாவளி வசூல் செய்வதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ்சாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் நேற்று மாலை 06.30 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீஸ், இன்ஸ்பெக்டர் மற்றும் அதிகாரிகள் அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்தார்கள். அப்போது உமா ஷங்கர் ஒரு பையுடன் அவரின் அறையில் இருந்து வெளியே வந்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை சுற்றி வளைத்து அவரிடம் இருந்த கையை கைப்பற்றி சோதனை செய்தார்கள். இதில் 6 லட்சத்து 68 ஆயிரம் கட்டு கட்டாக இருந்தது.
இந்த விசாரணையானது இரவு 10 மணி வரை நீடித்தது. விசாரணை முடிவில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லப்படுகின்றது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அதிகாரி ஒருவரிடம் கட்டு கட்டாக பணம் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இதுபோல ராமநாதபுரம் தாலுக்கா அலுவலகத்தில் துணை தாசில்தார் உட்பட 20 பேரிடம் 57,000 பணம் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகின்றது. சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் கணக்கில் வராத 45 ஆயிரம் போலீசார் கைப்பற்றினார்கள். மேலும் மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் தாலுகா அலுவலகத்தில் சோதனை செய்ததில் 15000 மற்றும் அங்குள்ள புத்தகத்தின் அருகே 6000 மற்றும் ஐந்து பேர் வைத்திருந்த கணக்கில் வராத பணம் என 64 ஆயிரத்து 500 ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீஸ்சார் பறிமுதல் செய்தார்கள்.