மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகின்றது.
மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதின. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக ஹீலி – மோனி களமிறங்கினார். தீப்டி சர்மா வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசி அதிரடி காட்டினார். தொடக்க வீரர் ஹீலி. 5, 6ஆவது பந்தையும் பவுண்டரிக்கு விளாசினார்.
பின்னர் 2ஆவது ஓவரை வீசிய பாண்டே ஓவரின் 2ஆவது மற்றும் 5ஆவது பந்தையும் பவுண்டரிக்கு அனுப்பி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அடுத்தடுத்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 47 ரன் எடுத்துள்ளது. அந்த அணியின் ஹீலி 29* மோனி 18* ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.