Categories
உலக செய்திகள்

BREAKING : ”சீனாவில் புதுக்கோட்டை இளைஞரை மீட்க நடவடிக்கை”

சீனாவில் கொரனா வைரஸ் தாக்கியுள்ள நிலையில் புதுக்கோட்டை இளைஞசரை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

சீனாவில் கொரனா வைரஸ் தாக்கி 170 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவி வருவதால் உலக அரங்கமே இந்த வைரஸ் கண்டு பீதி அடைந்து வருகின்றது. மேலும் சீனாவில் பல்வேறு பகுதியில் தொடர்பு தூண்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் சீனாவில் இருக்கும் இந்தியர்கள் 700க்கும் அதிகமானோரை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

ஏற்கனவே சீனாவில் இருக்கும் தன்னை மீட்க வேண்டுமென்று புதுக்கோட்டையை சேர்ந்த இளைஞன் ஸ்ரீபன் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட்து. இந்நிலையில் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்து இருப்பதாக அவரது குடும்பத்தினரிடம் வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது செய்து முடிக்கப் பட்டிருக்கிறது. சீன அதிகாரிகளின் ஒத்துழைப்பு தேவை என்றும் , அவர்களுடைய ஒப்புதலுக்காக தற்போது காத்திருப்பதாகவும் வெளியுறவுத் துறை தகவல் அளித்துள்ளது.

மேலும் தமிழக மாணவர்கள் ஸ்ரீபன் உட்பட மற்றும் கேரள மாணவர்கள் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் பலரை மீட்க வேண்டிய பணி இருப்பதாகவும் , இதற்கான அனைத்து நடவடிக்கையும் செய்யப்பட்டுவிட்டதாகவும் , சீன அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் உடனடியாக இந்தியாவில் இருந்து விமானம் கிளம்பி சென்று அவர்களை இங்கே அழைத்து வந்து விடும் என்றும் தகவல் அளித்திருக்கிறார்கள். விமானம் தயாராக வைக்கப் பட்டிருக்கிறது , அதிலே மருத்துவர்களும் பயணிப்பார்கள் , தேவையான மருந்து பொருட்களும் விமானத்தில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |