ஊத்துக்குளி தாலுக்கா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ்சார் திடீர் சோதனை செய்ததில் 80 ஆயிரம் பரிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்குளியில் இருக்கும் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றி வரும் தாசில்தார் சைலஜா பல்வேறு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்பதாக பொதுமக்கள் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார்களை அனுப்பி வைத்தார்கள். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் நேற்று மாலை 5 மணி அளவில் தாலுகா அலுவலகத்திற்கு வந்து கதவுகளை பூட்டினார்கள்.
இதனால் உள்ளே இருந்த யாரும் வெளியே செல்ல முடியவில்லை. பின்னர் அலுவலர்கள் அனைவரும் வெளியில் தொடர்பு கொள்ளாதவாறு செல்போன்களை ஸ்விட்ச் ஆப் செய்யுமாறு போலீசார் அறிவுறுத்தினார்கள். பின் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டதில் கணக்கில் வராத 80 ஆயிரத்து 70 கைப்பற்றப்பட்டது. இந்த பணம் அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பீரோக்களில் இருந்து கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறினார்கள். இந்த சோதனையானது இரவு வரை நீடித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.