திருவாரூர் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத 75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு நந்தகுமார் தலைமையிலான போலீசார் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்துக்குள் அதிரடியாக புகுந்து சோதனை மேற்கொண்டார்கள். இதனால் அலுவலகத்தில் உள்ள கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டது. உள்ளே இருந்தவர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.
நீண்ட நேரமாக நெடுஞ்சாலைதுறை அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை சரிபார்த்தார்கள். மேலும் அலுவலகத்தில் இருக்கும் அனைத்து அறைகளையும் சோதனை செய்ததில் கணக்கில் வராத 75 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் பற்றி கோட்ட பொறியாளர் இளம்ழுவதியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள். நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 75 லட்சம் பணம் சிக்கியுள்ளது.