கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவ காரணமாக பள்ளிகள் திறப்பது தற்போது சாத்தியமில்லை, பிறகுதான் திறக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ள நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியிருக்கிறார். கல்வியாளர்களின் பரிந்துரைப்படி 30 % பாடத்திட்டத்தை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Categories