ஊரடங்கினால் நடிக்கும் வேலை இல்லாத பிரபல மராத்தி நடிகர் கருவாடு விற்கும் தொழிலில் இறங்கியுள்ளார்
மராட்டி நடிகரான ரோகன் பெட்நேக்கர் சூட்டிங் இல்லாமல் இருந்த காரணத்தால் கருவாடு விற்பனை செய்ய தொடங்கியுள்ளார். இவர் மராட்டிய சூப்பர் ஹிட் தொடரான பாபாசாகேப் அம்பேத்கரில் நடித்து பிரபலமானவர். இந்நிலையில் தற்போது கொரோனாவினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதால் இவர் கருவாடு விற்பனை செய்யத் தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மீண்டும் எப்போது நடிப்பதற்கான வேலை வரும் என்பது தெரியவில்லை. என் அப்பா இந்த வேலையை செய்து வந்தார். அதனால் இதில் எனக்கு கொஞ்சம் அனுபவம் உள்ளது. இதை செய்வதில் எந்த அவமானமும் எனக்கு இல்லை எனக் கூறியுள்ளார். இதேவேளை இந்த தகவல் இவர் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.