தமிழ் திரையுலகின் இளம் நாயகனாக உள்ள நடிகர் அதர்வா, இயக்குனர் சற்குணம் படத்தில் நடிக்கவுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா, பானா காத்தாடி படத்தில் அறிமுகமாகி, சண்டிவீரன், பரதேசி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படம் குடும்பங்கள் ரசிக்கக்கூடிய படமாக இருக்கும் என்று இயக்குனர் கூறியிருக்கிறார்.
இப்படத்தில் நடிகர் அதர்வாவின் தாத்தாவாக நடிகர் ராஜ்கிரண் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.