Categories
சினிமா தமிழ் சினிமா

1.25 கோடி ரூபாய் வழங்கிய நடிகர் அஜித்… ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஸ்டேக்… கொண்டாடும் ரசிகர்கள்!

நடிகர் அஜித்குமார் கொரோனா தடுப்பு பணிக்காக 1.25 கோடி  ரூபாய் அளித்துள்ளதால் அவரது ரசிகர்கள்  #PerfectCitizenThalaAJITH என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித்குமார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவரது படம் குறித்த அறிவிப்பு ஏதாவது வெளியானாலோ அல்லது  படம், டிரைலர், டீசர் என ஏதாவது ஒரு அறிவிப்பு வெளியானால் போதும்  ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடுவார்கள். இந்த நிலையில் இன்று நடிகர் அஜித்குமார் கொரோனா தடுப்பு பணிக்காக 1.25 கோடி  ரூபாய் அளித்துள்ளார்.

Image

அதன்படி, பிரதமர் நிவாரண நிதிக்கு  50 லட்சமும், மாநில அரசுக்கு 50 லட்சம் ரூபாயும், பெப்சி தொழிலாளர்களுக்கு 25 லட்சம் என மொத்தம் 1.25 கோடி வழங்கியுள்ளார் தல அஜித் குமார். தமிழ் சினிமா துறையில் கொரோனா தடுப்பு நிதிக்கு நடிகர் ஒருவர் கொடுத்த அதிக தொகை இதுவாகும்.

Image

இதனால் நடிகர் அஜித் குமார் நிதியளித்த செய்தி வெளியான அடுத்த நிமிடம் அவரது ரசிகர்கள்  #PerfectCitizenThalaAJITH என்ற ஹேஸ்டேக்கை இந்தியளவில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். அஜித் ரசிகர்கள் ஒவ்வருவரும் ரியல் ஹீரோ, ஜென்டில் மேன், மனித கடவுள் என புகழ்ந்து வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிகளுக்கு மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை மத்திய அரசுக்கு அளிக்கலாம் என்று வேண்டுகோள் விடுத்தார். அதேபோல தமிழக முதல்வர் பழனிசாமியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவியளிக்க கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை ஏற்ற தல அஜித் குமார் 1.25 கோடி வழங்கியிருக்கிறார்.

https://twitter.com/TFC_mass/status/1247510221674524673

Categories

Tech |