இந்திய எல்லையில் நமது இந்திய கொடிய ஏந்தியவாறு உள்ள அஜித்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித் . இவர் தற்போது ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபகாலமாகவே உலக அளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் என்பது பலருக்கு தெரிந்த விஷயம் தான்.
அந்தவகையில், தற்போது, இவர் வாகா எல்லைக்கு சென்றுள்ளார். அங்கு நம்முடைய இந்தியக் கொடியை ஏந்தி பிடித்தவாறு இருக்கும் இவரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், அங்கு இருக்கும் ராணுவ வீரர்களையும் நடிகர் அஜித் சந்தித்து பேசியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.