அஜித் பைக்குடன் மாஸ் லுக்கில் இருக்கும் வீடியோ பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”வலிமை”. இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக நல்ல சாதனை படைத்தது. இதையடுத்து இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் அடுத்ததாக ”அஜித் 61” திரைப்படம் உருவாக உள்ளது.
இந்நிலையில், இவரின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாவது உண்டு. அந்த வகையில், தற்போது இவர் பைக்குடன் மாஸ் லுக்கில் இருக்கும் வீடியோ பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ பதிவு இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Annan…💖 #AK #AK61 pic.twitter.com/HwFiIQTWDn
— Rajasekar Russalayan (@iamrajesh_pov) April 15, 2022