Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் அஜித் சாம்பியன் கிடையாது” நான் தான் சீனியர்…. கார் ரேசர் அலிஷா ஸ்பீச்சால் ரசிகர்கள் ஆவேசம்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் நடிப்பை தாண்டி ஒரு சிறந்த புகைப்பட கலைஞராகவும், ட்ரோன் தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ளவராகவும், பைக் மற்றும் கார் ரேசராகவும், சைக்கிள் ரைடராகவும் இருக்கிறார். அதோடு துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் வல்லவர். இவர் சமீபத்தில் கூட துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு ஏராளமான பதக்கங்களை வென்றிருந்தார். இவர் அண்மையில் தன்னுடைய பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். இப்படி தனக்குள் பல்வேறு திறமைகளை வைத்திருக்கும் நடிகர் அஜித் பெரும்பாலும் பைக் மற்றும் கார் ரேஸர் என்றே ரசிகப் பெருமக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில் நடிகர் அஜித் பற்றி கார் ரேசரும் நடிகையுமான அலிஷா தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது, அஜித் ஒரு சிறந்த பைக் ரேசர். கார் ரேசர் தான். ஆனால் அஜித் சர்வதேச அளவில் சாம்பியன்ஷிப் வென்றது கிடையாது. அஜித்தை விட நான் தான் சீனியர். நான் அவருக்கு சில விஷயங்களை சொல்லிக் கொடுத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் நடிகை அலிஷாவின் வீடியோவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரசிகர்கள் அஜித் கார் ரேஸில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Categories

Tech |