ஆனாலும் இருவரின் ரசிகர்களும் அவ்வப்போது ஹேஸ்டேக்குகளை உருவாக்கி டுவிட்டரை தெறிக்க விடுகின்றனர். விஜய், அஜித் நடிக்கும் புதிய படங்கள் பற்றிய செய்திகள் டிரெய்லர்களை வெளியிட்டு வைரலாக்குகிறார்கள் விஜய்க்கு டுவிட்டரில் நேரடி கணக்கு இல்லாவிட்டாலும் அவரது அலுவலகம் சார்பில் ஒரு கணக்கு இயங்குகிறது.
அதில் விஜய்யின் புதிய படங்களின் தோற்றம் மற்றும் டிரெய்லர்கள் வெளியாகின்றன. அஜித்குமார் ரசிகர் மன்றத்தை கலைத்த பிறகு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார். பட விழாக்களிலும் பங்கேற்பது இல்லை. சமூக வலைத்தளங்களில் இருந்தும் தள்ளியே இருக்கிறார். அவரது படங்களின் முதல் தோற்றம் டிரெய்லரை டுவிட்டரில் ரசிகர்கள் டிரெண்டிங் செய்கின்றனர்.
இந்த நிலையில் அஜித்குமார் டுவிட்டருக்கு வர வேண்டும் என்று டுவிட்டர் இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் ரசிகர்கள் எந்த அளவுக்கு அவரது படங்களை விரும்புகிறார்கள் என்பதை அவர் அறிய முடியும் என்றும் தெரிவித்து உள்ளது. இந்த அழைப்பை ஏற்று அஜித்குமார் டுவிட்டரில் இணைவாரா? என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.