அஜித் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
தல அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ”வலிமை”. இந்த படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இதுவரை கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் ஒரு சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து, இந்த படத்தின் இரண்டாவது பாடல் ‘மதர் சாங்’ நேற்று வெளியானது. இந்நிலையில், இவர் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.