அஜித் நடிப்பில்உருவான நேர்கொண்ட பார்வை படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்த நிலையில் அடுத்து அஜித் நடிப்பில் தற்போது ‘வலிமை’ திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. நேர்கொண்ட பார்வை திரைபடம் ரீமேக் கதை என்பதால், அடுத்த திரைபடமான வலிமையை மிக பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட பட்டுள்ளதாக இயக்குனர் எச்.வினோத் கூறியுள்ளார் .
தற்போது தொடங்கப்பட்டுள்ள ஷூட்டிங்கில் முதன்முதலில் ஆக்ஷன் காட்சியை தான் படமாக்கி வருகிறார் எச்.வினோத். எனவே இதில் ஸ்டைலான மீசையுடன் இருக்கும் அஜித்தின் புது தோற்றம் கசிந்துவிடகூடாது என்று படப்பிடிப்பு தளத்தில் மொபைலுக்கு அனுமதிகக்வில்லை. அஜித் 100 அடியில் குதிப்பது போல் ஒரு திரைப்பட காட்சியை எடுத்துள்ளார்களாம். அதில் அஜித் டூப் போடாமல் அந்த காட்சியை நடித்து பிரம்மிக்க வைத்துள்ளார் . இப்போது இந்த திரை படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் முடிய உள்ளது , இதனை அடுத்து சென்னையில்
படபிடுப்பு குழுவினர் விரைவில் படம் எடுக்க தொடங்க உள்ளனர்.