பிரபல நடிகர் ஆனந்தராஜ்யின் தம்பி கனகசபை தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது அண்ணன் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி திருமுடி நகரை சேர்ந்தவர் கனகசபை(50) இவருக்கு திருமணம் ஆகவில்லை. நடிகர் ஆனந்தராஜ் அவர்களின் தம்பி கனகசபை ஆவார். தொழிலதிபரான இவர் ஏல சீட்டு மற்றும் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார்.
இந்நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்த கனகசபை கடந்த 5- தேதி வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்த நிலையில் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினார்கள்.
அதில் தனது க்கான காரணம் தற்கொலைக்கு தூண்டிய விவரங்களை குறிப்பிட்டுருந்தார். இது குறித்து பேசிய நடிகர் ஆனந்தராஜ் கடன் பிரச்சினையால் தற்கொலை செய்யவில்லை என்றும் அவரது வீட்டை அபகரிக்கும் முயற்சியில் சில மிரட்டல்கள் வந்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.
இதுதொடர்பாக கனகசபையின் மற்றொரு அண்ணன் அண்ணாமலை(56) மற்றும் அவரது மகன் சிவச்சந்திரன்(30) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கனகசபை தற்கொலை தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.