திலீப் நடிப்பில் உருவாகும் மலையாள படத்தில் நடிகர் அர்ஜுன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரையுலகில் நடித்தால் ஹிரோவாகத்தான் நடிப்பேன் என்று சிலர் சுற்றித்திரிகின்றனர். ஆனால் அர்ஜுன் அப்படியில்லாமல், தமிழில் இரும்புத்திரை படத்தில் வில்லனாகவும், தெலுங்கில் நா பெரு சூர்யா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு தந்தையாகவும் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது மலையாளத்தில் திலீப் நடிபில் தயாராகிவரும் ஜேக் டேனியல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் அர்ஜுன் சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்து கொண்டார். குடும்பக் கதையாக உருவாகும் இந்த படத்தில் அலற வைக்கும் சண்டை காட்சிகளும் இடம் பெற்றுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.