நடிகை திவ்யாவை தாக்கிய வழக்கில் அவரது கணவரான நடிகர் அர்ணவ் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சின்னத்திரையில் நடிகரான அர்ணவ் மீது அவரது மனைவி அணைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகர் அர்ணவ் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது .
இந்த நிலையில் நடிகர் அர்ணவ் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீஸ் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனக்கு கண்ணில் காயம் ஏற்பட்டதால் விசாரணைக்கு 18ஆம் தேதி ஆஜராவதாக கால அவகாசம் கேட்டு,
அவர் வக்கீல் தரப்பில் காவல் நிலையத்தில் நேரில் வந்து மனுவானது அளிக்கப்பட்ட நிலையில், நடிகை திவ்யாவை தாக்கியதாக அளித்த புகாரில் தலைமறைவாக இருந்த சின்னத்திரை நடிகர் அர்ணவ்வை போலீசார் கைது செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.