Categories
உலக செய்திகள்

“ரசிகர்கள் சாக்!”….. நடிகரை வீடு புகுந்து குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற இராணுவம்…. மியான்மரில் பரபரப்பு….!!

மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்திய நடிகருக்கு மூன்று வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

மியான்மர் நாட்டின், பிரபல நடிகரான பெயிங் தகோன் என்பவர் மாடல் மற்றும் பாடகர் என்று பல திறமைகள் கொண்டவர். இவருக்கு அங்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், அந்நாட்டில், ராணுவம் கடந்த பிப்ரவரி மாதம் ஆட்சியை கைப்பற்றியது. அதனை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது இராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இதில் பல மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், பெயிங் தகோன், ராணுவ ஆட்சியை எதிர்த்து நடைபெற்ற பல போராட்டங்கள் மற்றும் பேரணியில் கலந்து கொண்டார். மேலும் இணையதளங்களில் ராணுவத்தை எதிர்த்து கடும் விமர்சனங்களை பதிவிட்டு வந்தார். இதனால், கடந்த ஏப்ரல் மாதத்தில் அவரின் வீட்டிற்கு, 50க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் நள்ளிரவு நேரத்தில் சென்று அவரை கைது செய்தனர்.

மேலும், அவரை குண்டுகட்டாக தூக்கி சென்றார்கள். அதன்பின்பு, அவரின் இணையதள கணக்குகள் ராணுவத்தால் முடக்கப்பட்டது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று அவர் மீதான குற்றங்கள்  நிரூபிக்கப்பட்டு, நீதிபதி அவரை குற்றவாளியாக அறிவித்தார். மேலும், நீதிபதி அவருக்கு மூன்று வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறார். இது அவரின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Categories

Tech |