நடிகர் அஸ்வின் குமார் பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அஸ்வின் குமார் ரசிகர்களிடம் அதிக பிரபலமடைந்தார். இதனைத்தொடர்ந்து, “என்ன சொல்லப் போகிறாய்” என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பிறகு அந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், அவர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை ஆத்திரமடையச்செய்தது. அதாவது, சுமார் 40 இயக்குனர்களின் கதைகளை கேட்டு தான் தூங்கிவிட்டதாக கூறினார். இது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. எனவே, தற்போது வரை நெட்டிசன்கள் இவரை வைத்து கலாய்த்து கொண்டிருக்கிறார்கள்.
அஸ்வின் குமாரை வைத்து பல மீம்கள் இணையதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில், என்ன சொல்ல போகிறாய், திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. இத்திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. எதிர்பார்த்த அளவில் படம் வெற்றியடையவில்லை.
இதற்கு, இசை வெளியீட்டு விழாவில் அஸ்வின் பேசியது தான் காரணம் என்று படக்குழுவினர் கூறுகிறார்களாம். எனவே, அஸ்வினிடம், மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோவை வெளியிடுங்கள் என்று படக்குழுவினர் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அஸ்வின் மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
மேலும் தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஸ்டோரி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், “பழிவாங்க எனக்கு சோம்பேறித்தனமாக இருக்கிறது. எதையும் கர்மா பார்க்கும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள், ஏற்கனவே, பேசிய பேச்சுக்கு வெளியான ஒரு படமும் வெற்றி பெறவில்லை. இதெல்லாம் தேவையா? என்று கலாய்த்து வருகிறார்கள்.