Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அதர்வா நடிக்கும் புதிய படம்…. மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…. செம வைரல்….!!!

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா. இவர் தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ”பானா காத்தாடி” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பரதேசி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

களவாணி இயக்குனருடன் இணைந்த அதர்வா.. மிரட்டும் போஸ்டர்..

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ட்ரிக,ர் குருதி ஆட்டம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்றது. இதனையடுத்து, தற்போது இவர் இயக்குநர்  சற்குணம் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

 

Categories

Tech |