நடிகர் பக்ரூ குடும்ப புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
பக்ரூ பிரபல மலையாள நடிகர் ஆவார். இவர் தமிழில் ‘காவலன்’, ‘டிஷ்யூம்’, ‘ஏழாம் அறிவு’ என சில படங்களில் நடித்திருக்கிறார். இவர் மலையாளத்தில் ஒரு படத்தை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு காயத்ரி மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.