மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் உன்னி முகுந்தன் நடிப்பில் சமீபத்தில் ஷபீக்கிண்டே சந்தோஷம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் நடிகர் பாலா முக்கிய வேடத்தில் நடித்திருந்த நிலையில், நடிகர் உன்னி முகுந்தன் தான் உட்பட பல்வேறு நடிகர்களுக்கு சம்பளம் வழங்காமல் பெண் கலைஞர்களுக்கு மட்டும் சம்பளம் வழங்கியதாக நடிகர் பாலா பேட்டியில் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் நடிகர் உன்னி முகுந்தன் பாலாவுக்கு சம்பளம் வழங்கிய வங்கி காசோலையை தற்போது செய்தியாளர்களிடம் காண்பித்து அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளார். அதன்படி நடிகர் பாலாவுக்கு ஒரு நாளைக்கு 10,000 விதம் ரூபாய் 2 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று படத்தில் ஒளி பதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் ஆகியோருக்கும் உன்னி முகுந்தன் சம்பளம் வழங்கிய ஆதாரத்தை காண்பித்துள்ளார். மேலும் இதனால் பாலா வேண்டுமென்றே உன்னை முகுந்தன் மீது குற்றம் சாட்டியதாக தற்போது மலையாள சினிமாவில் பரபரப்பாக பேசப்படுகிறது.