சென்னை: பரபரப்பான ஷுட்டிங்குக்கு இடையில் நடிகர் பாபி சிம்ஹாவின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர் ‘இந்தியன் 2’ படக்குழுவினர்.லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிவரும் ‘இந்தியன் 2’ முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
இதன் பின்னர் குவாலியர் நகரில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் நகரில் ஷுட்டிங் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. பிஸியான படப்பிடிப்புக்கு இடையே படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துவரும் நடிகர் பாபி சிம்ஹாவின் பிறந்தநாளான நேற்று (நவம்பர் 6) கேக் வெட்டி படக்குழுவினர்கள் கொண்டாடியுள்ளனர்.
இயக்குநர் ஷங்கர், பைட் மாஸ்டர் பீட்டர் ஹெயின், காமெடி நடிகர் விவேக் உள்ளிட்டோர் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். மேலும், பாபி சிம்ஹாவோடு எடுத்துக்கொண்ட செஃல்பியை பகிர்ந்துள்ள நடிகர் விவேக், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
.@actorsimha Actor Bobby Simha Celebrated His Birthday In #Indian2 Sets Along With @shankarshanmugh @Actor_Vivek @PeterHeinOffl
.
.@ikamalhaasan @LycaProductions
.#HappyBirthdayBobbySimha #HBDBobbySimha#BobbySimha pic.twitter.com/5QjCseJr0x— Yuvraaj (@proyuvraaj) November 6, 2019
Celebrating Bobby simha”s bday at ajmer , Rajasthan. This 2 Indians are missing @ikamalhaasan the indian2! He had gone to TN for his bday celebrations! Missing him here!! pic.twitter.com/fVevD3hZ6B
— Vivekh actor (@Actor_Vivek) November 6, 2019
https://twitter.com/kollyempire/status/1192100506279104512