நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை நடிகர் தனுஷ் தவறிவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2002 ஆம் வருடத்தில் வெளியான திரைப்படம் பகவதி. காதல் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த வந்த விஜய் இத்திரைப்படத்தின் மூலமாக அதிரடி கதாநாயகனாக மாறினார். இத்திரைப்படத்தில் விஜய்க்கு தம்பியாக நடிகர் ஜெய் நடித்திருப்பார்.
முதலில், நடிகர் தனுஷைத் தான் விஜய்க்கு தம்பியாக நடிக்க வைக்க கேட்டிருக்கிறார்கள். ஆனால் தனுஷ், நான் சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து விட்டேன். எனவே, தம்பி கதாபாத்திரத்தில் நடிப்பது சரியாக இருக்காது என்று தெரிவித்துவிட்டாராம். பல வருடங்களுக்கு முன் நடந்த இச்சம்பவம் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.