பிரபல ஹீரோயினான கீர்த்தி சுரேஷிற்கு நடிகர் ஒருவர் பீட்சா ஊட்டி விடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது “ராங்குதே” என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் நிதின் நடித்துள்ளார். மேலும் வெங்கி இயக்கியுள்ள இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் மார்ச் 26ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ஹீரோவான நிதின் கீர்த்தி சுரேஷிற்கு பீட்சா ஊட்டி விட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.