தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். இவர் கடல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு இவன் தந்திரன், ரங்கூன், மிஸ்டர் சந்திரமவுலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல மலையாள நடிகை மஞ்சிமா மோகன் காதலித்து வருகிறார். அச்சம் என்பது மடமையடா திரைப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மஞ்சிமா மோகன் தேவராட்டம் என்ற திரைப் படத்தில் நடித்த போது கௌதம் கார்த்திக் உடன் காதலில் விழுந்தார்.
இவர்களுடைய திருமணம் குறித்த தகவல் அண்மையில் இணையதளத்தில் வெளியான நிலையில் மஞ்சிமா மற்றும் கௌதம் கார்த்திக் இருவருமே தங்களுடைய காதலை உறுதிப்படுத்தினர். இந்நிலையில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் திருமண தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி நவம்பர் 28-ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் திருமணம் முடிந்த பிறகு மிக பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தி திரை உலக பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.