வைபவ் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் ‘சிக்சர்’ பட தயாரிப்பாளருக்கு பிரபல காமெடி நடிகர் கவுண்டமணி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நடிகர் வைபவ், பல்லக் லால்வானி, சதீஷ், ராதா ரவி மற்றும் பலர் நடித்துள்ள சிக்சர் திரைப்படம் இன்றுமுதல் திரைக்கு வந்துள்ளது. இந்நிலையில் அனுமதி பெறாமல் தன்னுடைய புகைப்படத்தையும் சின்னத்தம்பி பட வசனத்தையம் சிக்ஸர் படத்தில் தவறான முறையில் பயன்படுத்தியதாக கவுண்டமணி குற்றம் சுமத்தியுள்ளார்.
கவுண்டமணியின் நற்பெயருக்கு கெடுதல் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ள காட்சியை நீக்கி, மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் இல்லையேல் சட்டபூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தயாரிப்பாளர்களுக்கு கவுண்டமணி சார்பாக வழக்கறிஞர் சசிகுமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.