கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை கொன்று குவித்து கொலை நடுங்கச் செய்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் இந்தியாவில் இதுவரை 987 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 26 பேர் பலியாகியுள்ளனர். இந்த கொடிய கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு அடுத்த ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், சிலர் அத்தியாவசிய தேவையின்றி அதன் தாக்கம் உணராமல் வெளியே சுற்றித்திரிகின்றனர். இப்படி வெளியில் ஊர் சுற்றும் மக்களை, காவல் துறையினர் எச்சரித்தும், தடியடி நடத்தியும், வழக்குப்பதிவு செய்தும் வருகின்றனர். மேலும் திரைத்துறையினர் பலரும் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருங்கள் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ஜீவா, கொரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு விழிப்புர்ணவு ஏற்படுத்தும் வகையில் ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார். அதாவது, தனது ட்விட்டர் கணக்கில் அவரது பெயரை ‘உள்ளே போ!’ என்று மாற்றியிருக்கிறார். நடிகர் ஜீவாவின் இந்தப் புதிய முயற்சி அனைவரையும் கவர்ந்துள்ளது. இதனை பார்த்த பலரும் ஜீவாவின் முயற்சிக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.
— Jiiva (@JiivaOfficial) March 23, 2020