கொரோனா அச்சத்தால் பெற்றோர் கெஞ்சி கேட்டும் வேலையை விட்டு விலகாத 108 ஆம்புலன்ஸ் டிரைவரை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். தமிழக சுகாதாரத்துறை இதனை கட்டுப்படுத்த பல்வேறு நவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகனான பாண்டித்துரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை ஏற்றுவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் 108 ஆம்புலன்ஸில் டிரைவராகப் வேலைபார்த்து வருகிறார்.
இதனால் இவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அவரது குடும்பத்தினர் இந்த வேலையை தயவுசெய்து விட்டு விட்டு வரும்படி கெஞ்சி கேட்டும் ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வந்தது.
இந்த வேலை வேண்டாம் என 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பாண்டித்துரை என்பவரின் தாய் அவரைக் கெஞ்சி கேட்டு, ஊரில் உள்ள தனது வீட்டுக்கு வருமாறு அழைக்கிறார். இருப்பினும் தனக்கு சமூக அக்கறைதான் முக்கியம் என்று அவர் தாயிடம் சொன்ன ஆடியோ பதிவு பலரை நெகிழ்ச்சியடையச் செய்தது. இந்த டிரைவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் தன்னலம் பாராமல் பிறருக்கு உழைக்கும் இந்த டிரைவர் பாண்டித்துரையை நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில்பாராட்டியுள்ளார். அதில், “108 ஓட்டுநர் பாண்டித்துரை நீங்கள் என் நம்பிக்கையின் நாயகன். இவர் போன்ற தன்னலம் பாராது நாட்டிற்காக முன்னிற்கும் வீரர்கள் தான் நம் தேசத்தை இயக்குபவர்கள்.பாசத்தில் கதறும் அவரின் பெற்றோரின் குரல், உள்ளத்தை உலுக்கும் போதும் நாடு என்னவாகும்?என்று கேட்கும் அந்த மனம் தான் கடவுள். கட உள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/LsPreetham/status/1243936901414838273