Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் கார்த்தியின் சர்தார்” மிரட்டலான டிரைலர் வெளியீடு…. டிரெண்டாகும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட்‌ ஆனது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி தற்போது சர்தார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை பிஎஸ் மித்ரன் இயக்க, ராசி கண்ணா, ரெஜிஸா விஜயன், லைலா, சங்கி பாண்டே, முரளி ஷர்மா, அவிநாஷ், மாஸ்டர் ரிக்விக் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்க, பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21-ஆம் தேதி சர்தார் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் கார்த்தி ராணுவ ரகசியத்தை கண்டுபிடிப்பதற்காக செல்வது போன்று படத்தின் டிரைலர் இருக்கிறது. இந்த டிரைலர் தற்போது ரசிகர்களை கவர்ந்து இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Categories

Tech |