நடிகர் நாகேஷை அவர் வீட்டில் செல்லமாக குண்டுராவ் என்றும் குண்டப்பா என்றும் அழைத்து வந்தனர். நாகேஸ்வரன் என்ற இயற்பெயர் கொண்ட இவரின் ஒல்லியான தேகத்தை பார்த்த பிறகும்கூட குண்டப்பா என்ற பட்டப்பெயர் வைத்திருப்பதே வேடிக்கையான ஒரு உண்மைதான். தாராபுரத்தில் பள்ளிப்படிப்பை முடித்து கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது 1951ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் நாள் இவரின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக அமைந்தது.
வைசூரி என்னும் மிகக்கடுமையான அம்மைநோய் இவரின் முகத்தில் அடுத்தடுத்து தாக்கி நிரந்தர தழும்புகளையும் ஏற்படுத்தியது. இந்த நோய் ஏற்படுத்திய வலியால் கல்லூரிப் படிப்பை பாதியிலேயே விட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அதன்பிறகு தனது இளம் வயதில் வீட்டை விட்டு வெளியேறிய திருநாகேஸ் சென்னையில் மேன்சன் என்று சொல்லப்படும் சிறிய அறை ஒன்றை எடுத்து தங்கியிருந்தார். இவருடன் கவிஞர் வாலியும் இயக்குனர் ஸ்ரீதரும் தங்கியிருந்தார்கள் என்பது ஆச்சரியமான ஒரு உண்மை.
வறுமை காரணமாக தனக்கு கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து வந்தார். ஊறுகாய் கம்பெனியில் எடுபிடி வேலை, மில்லில் கூலி வேலை, ஹோட்டலில் சர்வர் வேலை என்று பட்டியல் தொடரும். ஹோட்டலில் சர்வராக பணிபுரிந்த அனுபவம்தான் பின் நாளில் சர்வர் சுந்தரம் படத்தில் சர்வராக நடித்து புகழ் பெற உதவியதாக குறிப்பு ஒன்று உண்டு. நடிப்பில் அதீத ஆர்வம் இருந்தது இவரின் முகத்தில் அம்மைத் தழும்புகள் இருந்ததால் சினிமா வாய்ப்பு கேட்டு போன இடங்களில் எல்லாம் ஏராளமான அவமானங்களை அனுபவித்தார். ஏன்பா… விட்டுல கண்ணாடி பாக்குற பழக்கம் இல்லையா… போ போ…! என அனைத்து சினிமாக்களும் இவரை விரட்டி அடித்தன.
எம்ஜிஆரின் புண்ணியத்தில் நடித்துக் காட்ட வாய்ப்பு ஒன்று கிடைத்தது. வெரும் ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே நடித்து காட்டிய நாகேஷுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த எம்.ஜி.ஆர் வெள்ளி கோப்பை ஒன்றை பரிசாக வழங்கினார். அன்பு முதல் எம்.ஜி.ஆர் கொடுத்த வெள்ளி கோப்பையை தனது அங்கீகாரமாக நினைத்து தனது அறையில் பத்திரமாக வைத்திருந்தார். திடீரென ஒருநாள் அது காணாமல் போக தன் அறையில் தங்கியிருந்த நண்பன் பசி தாங்க முடியாமல் அதை விற்று விட்டார் என்று தெரிய அன்று இரவு முழுவதும் தனியாக அழுததோடு இனி நான் சாகும் வரை எந்த விருதையும் வீட்டில் பார்வைக்கு வைக்க மாட்டேன் என்று சபதம் எடுத்து தான் புகழின் உச்சியை தொட்ட போதும் கூட தனது வீட்டின் சோட்கேசில் தான் வாங்கிய சில்டுகலையோ பதக்கங்கலையோ கடைசிவரை வைக்காமலே இருந்தார் என்பது விசித்திரமான ஒரு உண்மை.
திரு நாகேஷ் ரெஜினா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நாகேஷ் ரெஜினா தம்பதிகளுக்கு ஆனந்த் பாபு, ரமேஷ் பாபு, ராஜேஷ் பாபு என்ற மூன்று மகன்கள் உள்ளனர். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது எம்மதமும் சம்மதம் என அனைவருக்கும் ஆசி வழங்கினார். சினிமாவில் பிஸியாக இருந்த நேரத்தில் நாகேஷுக்கு முதல் குழந்தை பிறந்தது. அப்போது நாகேஷ் தன் குழந்தையைப் போய்ப் பார்க்காமல் நடித்துக் கொண்டிருந்தார். உடன் இருந்தவர்கள் அனைவரும் ஏன் உங்கள் குழந்தையைப் பார்க்கப் போகவில்லை என்று கேட்க அதற்கு “என் முகத்தை பாருங்கள், அம்மைத் தழும்புகள் எப்படி விகாரமாக இருக்கிறது. இந்த முகத்துடன் போய் பார்த்தால் என்னை பார்க்கும் அந்த குழந்தை பயந்து விடாதா? என்று பதில் சொன்னார்.
தன் முகத்தை பற்றி அந்த மாபெரும் கலைஞனுக்கு எவ்வளவு வருத்தமும் சோகமும் இருந்திருக்கிறது என்பது இதன் மூலம் நமக்குத் தெரிகிறது. எம்ஜிஆருடன் அதிக படங்களில் நடித்த காமெடியன் என்ற பெருமையை பெற்றவர். எம்ஜிஆருடன் இணைந்து சுமார் 44 படங்களில் நடித்து சாதனை செய்தவர். பணம் பற்றி கேட்டபோது எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயது தானே இருக்கு என்று சொன்ன எளிமையான மனிதர். டாக்டர் நிர்மலா என்ற நாடகத்தில் தை தண்டபாணி என்ற நோயாளியாக நடித்து அசத்தியதால் தை நாகேஷ் என்ற அடைமொழியை பெற்றவர்.
நடிகர் நாகேஷ் எப்போதும் அதிகமாக குடித்து விட்டு வருகிறார் என்று நடிகை ஸ்ரீவித்யா எரிச்சலுடன் சொன்ன போது ஸ்ரீவித்யாவுக்கு நான் நிறையப் குடித்து கொண்டிருக்கிறேன் என்று வருத்தமாம். நான் நிறைய கொடுத்திருக்காவிட்டால் என் அருகில் உள்ள எனது உயிர் நண்பர்கள் அதை எடுத்து அதிகம் குடித்து கெட்டுப் போய் இருப்பார்களே என்று அலட்டாமல் நக்கல் அடித்தார். பேட்டி என்றாலே தன் ஊரை விட்டே விரட்டி அடிக்கும் கவுண்டமணியை தான் நமக்குத் தெரியும். ஆனால் அந்த காலத்திலேயே நடிகர் நாகேஷிடம் யாராவது பேட்டி எடுக்க அனுமதி கேட்டால் “பேட்டியா…? அப்ப வரவேண்டாம். வேணும்னா ஒரு ரசிகராக நண்பராவோ வாங்க உட்லண்ட்ஸ்ல பில்ட்டர் காப்பி சாப்பிடலாம்..!” என்று ஒலிக்கும் இவரது டெலிபோன் குரல் பல நிருபர்களுக்கு கிளியாகவே இருந்திருக்கிறது.
1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்த இந்த மகா கலைஞன் 1933ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் நாள் தாராபுரத்தில் உள்ள கொளூஞ்சுவாடி என்ற படத்தில் கிருஷ்ணா ராவ் ருக்மணி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது, நடிகர் சூடாமணி விருது போன்ற விருதுகளை வென்றுள்ள இவர் 2009 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் நாள் தனது 75-வது வயதில் காலமானார்.