உலகம் முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரசால் இதுவரை உலக அளவில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 727 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் பரவலைத் தடுப்பதற்கு நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நடிகர், நடிகைகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ‘பாகுபலி’ படத்தின் நடிகர் பிரபாஸ், கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைப் போக்கும் வகையில், பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு ரூ 3 கோடியும், ஆந்திரா, மற்றும் தெலங்கானா முதலமைச்சர்களின் நிவாரண நிதிக்கு ரூ 1 கோடியும் நிதியுதவியாக வழங்கியுள்ளார். கொரோனா நிதியாக மொத்தம் ரூ 4 கோடியை கொடுத்த நடிகர் பிரபாஸை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதேபோல் நடிகர்கள் பலரும் ஆந்திரா மற்றும் தெலங்கானா முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.
அவர்கள் விவரம் :
பவன் கல்யாண் : ரூ 2 கோடி
மகேஷ் பாபு : ரூ 1 கோடி,
ராம் சரண் : ரூ 70 லட்சம்,
நிதின் : ரூ 20 லட்சம்
வருண் தேஜ் : ரூ 10 லட்சம்